திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 7 ஏப்ரல் 2021 (13:17 IST)

அந்தகன் படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகர்!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக கலக்கி வரும் சமுத்திரக்கனி பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் . அந்தகன் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த படத்தை அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே ஜே பிரட்ரிக் இயக்க ஒப்பந்தமானார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் விலக இப்போது பிரசாந்தின் தந்தை தியாகராஜனே அந்த படத்தை இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக் மற்றும் கே எஸ் ரவிகுமார் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இப்போது சமுத்திரக்கனியும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.