திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (09:03 IST)

கே ஜி எப் இயக்குனர் படத்தில் விஜய்? ரசிகர்களை குஷியாக்கிய செய்தி!

நடிகர் விஜய் அடுத்து நடிக்கும் படத்தை கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் உற்சாக வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து பிரசாந்த் நீல் சலார் என்ற படத்தை பிரபாஸை வைத்து இயக்கி வருகிறார். இந்த படமும் பல மொழிகளில் உருவாவதால் பிரசாந்த் மீது முன்னணி நடிகர்களின் பார்வை விழுந்துள்ளது. அவர் இயக்கத்தில் நடிக்க பலரும் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யை வைத்து அவர் ஒரு படத்தை இயக்க உள்ளதாக பாலிவுட் இணையதளங்களில் செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.