வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 18 மார்ச் 2021 (07:51 IST)

அந்தகன் படத்தை அடுத்து பிரசாந்த் நடிக்கும் படம்… இயக்குனர் இவரா?

நடிகர் பிரசாந்த் இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் . அந்தகன் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த படத்தை அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே ஜே பிரட்ரிக் இயக்க ஒப்பந்தமானார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் விலக இப்போது பிரசாந்தின் தந்தை தியாகராஜனே அந்த படத்தை இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் பிரசாந்த் அடுத்த ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். ஏற்கனவே பிரசாந்தை வைத்து சாக்லேட் என்ற படத்தை இயக்கிய ஏ வெங்கடேஷ்தான் இந்த படத்தை இயக்க உள்ளாராம். இதற்கான திரைக்கதை பணிகள் இப்போது நடந்து வருகிறதாம்.