திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2018 (17:47 IST)

ரஜினியும் கமலும் ஓன்றாக வரவேண்டும் : சமுத்திரக்கனி கருத்து

நடிகர்கள் ரஜினி மற்றும் கமலின் அரசியல் வருகை குறித்து இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார்.

 
நாடோடிகள் படத்தை இயக்கியது முலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக உருவெடுத்தார் சமுத்திரக்கனி. விசாரனை படத்தில் நடித்ததிற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது.
 
ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து அரசியல்வாதிகள், திரைத்துறையினர் என பலரும் கருத்து கூறிவந்த நிலையில் சமுத்திரக்கனியும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
 
பிரபல தமிழக தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் “ரஜினியும் கமலும் அரசியலில் தனித்தனியாக இல்லாமல் ஓன்றாக இணைந்து செயல் பட வேண்டும்” என கூறியுள்ளார்.