திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 31 ஜனவரி 2018 (14:03 IST)

ஆட்டுத்தலை போல் உள்ளது: ரஜினியை விளாசும் சரத்குமார்!

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து நடிகர் சரத்குமார் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நடிகர் சரத்குமார் கலந்துகொண்டு பேசினார்.
 
அப்போது பேசிய அவர் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக ரஜினி காட்டும் பாபா முத்திரை குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
 
ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியின் முத்திரை குறித்து சர்ச்சைக்குறிய கருத்து தெரிவித்தார். அது சாத்துனுடைய முத்திரை என அவர் கூறினார்.
 
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகர் சரத்குமார், நானும் ஆன்மீகவாதிதான், ஆனால் நான் ரஜினி காட்டுவது போல பாபா முத்திரையைக் காட்ட மாட்டேன். அது ஆட்டுத் தலை போல உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே சீமான் கூறியுள்ளார். அது பாபாவின் முத்திரையல்ல, சீக்ரெட் சமூகத்தில் முத்திரை என தெரிவித்தார்.