புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (15:18 IST)

எஸ் ஆர் பிரபு படத்தில் இருந்து வெளியேறினாரா சமந்தா?

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் ஒரு புது படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆனார்.

நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததை அடுத்து  பரபரப்பான நாயகியாக பார்க்கப்படுகிறார். விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸானது. அடுத்து குஷி, யசோதா மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

இந்நிலையில் தமிழில் எஸ் ஆர் பிரபுவின் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்துக்கு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பந்தம ஆன நிலையில் இப்போது அந்த படத்தில் இருந்து சமந்தா வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு காரணம் சம்பளம் பற்றிய பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது.