திங்கள், 20 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (10:25 IST)

தற்காப்புக் கலை பயிற்சி எடுத்து வரும் சமந்தா… எதற்காக தெரியுமா?

நடிகை சமந்தா தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததை அடுத்து  பரபரப்பான நாயகியாக பார்க்கப்படுகிறார். விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸானது. அடுத்து குஷி, யசோதா மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

தற்போது சமந்தா பிரபல இணைய தொடர் இயக்குனர்கள் ராஜ்- டிகே இணை இயக்கும் புதிய வெப் தொடரில் நடிக்க உள்ளார். இந்த தொடரில் கதாநாயகனாக வருண் தவான் நடிக்கிறார். இந்த தொடர் சிட்டாடல் எனும் தொடரின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த தொடருக்காக சமந்தா மற்றும் வருண் தவான் ஆகிய இருவரும் தற்போது தற்காப்புக் கலைகளில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.