செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (08:52 IST)

அதர்வா நடித்துள்ள ஆக்‌ஷன் திரில்லர்… வெளியானது ‘டிரிகர்’ படத்தின் டீசர்

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிரிகர். இந்த படத்தில் நடிகர் அருண் பாண்டியன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதர்வா நடிப்பில் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு குருதி ஆட்டம் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அந்த திரைப்படம் ரசிகர்களைக் கவரவில்லை.

இந்த படத்துக்குப் பிறகு அதர்வாவின் மற்றொரு படமான ‘டிரிக்கர்’ என்ற படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த படம் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்தப் படத்தில் அதர்வா ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு மற்றும் 100 ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு பிரபல இயக்குனர் பிஎஸ் மித்ரன் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்த படத்தின் டீசர் நேற்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு படத்தில் அருண் பாண்டியன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.