திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 14 நவம்பர் 2018 (20:14 IST)

தளபதி 63: திருமணமான நடிகையுடன் ஜோடி சேரும் விஜய்?

சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து இயக்குனர் அட்லீயுடன் இணைந்து தன்னுடைய 63 வது படத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
தளபதி 63 வது படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று காலை துவங்கியது. இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியது.   
 
அட்லீ தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.  
 
இந்நிலையில் படத்தின் நாயகி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு சமந்தா அல்லது நயன்தாரா என இரு வித பதில்கள் பரிசீலனையில் உள்ளன. சமந்தா ஏற்கனவே தெறி மற்றும் மெர்சல் ஆகிய வெற்றி படங்களில் விஜய்யுடன் நடித்ததால் சமந்தாவிற்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.