புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 14 நவம்பர் 2018 (19:06 IST)

தளபதி மிக்ஸி, கிரைண்டர்னா... தல வேட்டி சேல...: ஆனா டார்கெட் ஒன்னுதான்!

சர்கார் படத்தில் அரசியல் கட்சிகள் ஓட்டுகளை எதிர்பார்த்து கொடுத்த இலவச மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை எரிக்கும் காட்சிக்கு அதிமுக அரசு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டது. 
 
இது பெறும் பரபர்ப்பை ஏற்படுத்திய நிலையில், இலவசங்கள் குறித்து 25 வருடங்களுக்கு முன்னரே ரஜினிகாந்த் வள்ளி என்ற படத்தில் இலவசங்களை விமர்சித்தார் என செய்திகள் வெளியானது. 
 
தற்போது தல அஜித், 2004 ஆம் ஆண்டு வெளியான ஜனா படத்தில் இலவசங்கள் கொடுப்பதை விமர்சித்துள்ளார் என அதனை வீடியோவோடு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 
 
அஜித் பேசும் அந்த வசனம் பின்வருமாறு, யாராவது ஒருத்தர் இலவசமா 100 வேஷ்டி சேல தந்தா கூட போதும், ஒடனே அத வாங்கிட்டு அவருக்கு ஒரு பட்டத்த கொடுப்போம், ஓட்டு போட்டு தலைவனாக்குவோம், அவன் நம்பல தெருவுல விட்டுட்டு ஓடி போய்ருவான், நாம்ப இப்படியே இருப்போம் என பேசியுள்ளார். 
 
இந்த குறிப்பிட்ட வீடியோ தற்போது இணையதலங்களில் வைரலாக பரவி வருகிறது.