1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 14 நவம்பர் 2018 (17:42 IST)

சூர்யாவுக்கு ஐ லவ் யூ சொன்ன பிரபல நடிகர் - கடுப்பான ஜோதிகா

விஜய் தேவர்கொண்டா நடிப்பில் நவம்பர் 17-ம் தேதி திரைக்கு வர இருந்த டாக்ஸி வாலா திரைப்படத்தினை நவம்பர் 13-ம் தேதியே தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழ் ராக்கர்ஸ் எப்போதும் படங்கள் வெளியான முதல் நாள் அன்றே அந்தப் பட்டத்தினை வெளியிடுவதாகச் சொல்லிய படி இணையத்தில் பதிவேற்றும்.
 
ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக டாக்ஸி வாலா தெலுங்கு திரைப்படத்தின் எச்டி பதிப்பை 5 நாட்கள் முன்பே இணையத்தில் வெளியிட்டுப் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்கார் படத்தினையும் அப்படித் தான் சொன்னபடியே நவம்பர் 6-ம் தேதி ரிலீஸ் செய்தது.
 
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால், நடிகர் சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் டாக்ஸி  வாலா படக்குழுவிற்கு கூறியுள்ளார். மேலும்  நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்றும் தைரியம் சொல்லியுள்ளார். 
 
இதற்கு பதிலளித்த நடிகர் விஜய் தேவர்கொண்டா, தனது நன்றி கலந்த அன்பை வெளிப்படுத்தி ட்வீட்டை பதிவிட்டிருக்கிறார். 
 
அவர் கூறியதாவது, ஐ.லவ்.யூ சூர்யா சார்..! தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருந்தாலும், இளம் நடிகருக்கு ஒரு பிரச்சனை வரும்போது ஆறுதலாக விளங்கிய நடிகர் சூர்யாவின் இந்த செயல் பாராட்டிற்குரியது என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார் .