1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 10 செப்டம்பர் 2022 (20:20 IST)

தேசிய விருது நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா..

samantha ruthprabhu
பிரபல இயக்குனர் இயக்கவுள்ள படத்தில் சமந்தா தேசிய விருது பெற்ற நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் சமந்தாவின் புதிய திரைப்படம் யசோதா. இந்த படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை கிருஷ்ண பிரசாத் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிசர்மா இசையமைக்கிறார். இந்த படத்தின் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சொன்னபடி அந்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் தற்போது அந்த படத்தின் டீசர்   நேற்று வெளியானது.

இந்த நிலையில், இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில், நடிகை சமந்தா நடிக்கவுள்ள பெயரியடப்படாத ஒரு படத்தில் சமந்தா இளவரசியாகவும், பேயாகவும் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகயுள்ளது. மேலும், இப்படத்தில், தேசிய விருது நடிகர் ஆயுஸ்மான் குரானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.