திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (14:49 IST)

டிராவிட்டின் ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது… முன்னாள் வீரர் விமர்சனம்

ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்று சில மாதங்களைக் கடந்துவிட்டார்.

இந்த காலத்தில் அவர் பயிற்சியின் கீழ் இந்திய அணி சில இரு நாட்டு தொடர்களை வென்றுள்ளது. அதே சமயம் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. தற்போது ஆசியக் கோப்பை தொடரில் இருந்தும் வெளியேறியுள்ளது.

அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலியா தொடர், தென் ஆப்பிரிக்கா தொடர் மற்றும் டி 20 உலகக்கோப்பை தொடர் ஆகியவை இந்திய அணியின் இலக்குகளாக உள்ளன. இதை வெல்ல வேண்டிய கட்டயத்தில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில் டிராவிட் பயிற்சி பற்றி பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் “ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது. இதை ராகுல் டிராவிட் கூட அறிந்திருப்பார்.. இனிமேல். ராகுல் டிராவிட்டுக்கான நெருக்கடி நேரம் " என்று கூறியுள்ளார்.