''சலார் ''பட டிரைலர் நாளை ரிலீஸ்: ரெட் ஜெயிண்ட் மூவிஸ் அறிவிப்பு
பாகுபலி படத்திற்கு பின் பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அவரது சமீபத்திய படங்கள் பெரிதாக எடுபடாத நிலையில், சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான். இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.
இந்த நிலையில், வரும் டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல கவனம் பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சலார் முதல் பாகத்தின் டிரைலர் டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் இதன் டிரைலர் அப்டேட்டை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், இந்நிலையில், நாளை மாலை 7:19 மணிக்கு இப்பட டிரைலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த டிரைலர் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.