1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (16:52 IST)

'லால் சலாம்' படத்தைக் கைப்பற்றிய ரெட் ஜெயிண்ட் மூவிஸ்

lal salam
'லால் சலாம்' படத்தின் முக்கிய அறிவிப்பை லைகா  அறிவித்துள்ளது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் என்ற படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தேதியில் ரிலீஸ் ஆக திட்டம் இடப்பட்டிருந்த அயலான் மற்றும் அரண்மனை 4 ஆகிய படங்களின் ரிலீஸுக்கு சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் லால் சலாம்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது  நடிகர்கள் டப்பிங் மற்றும் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்த நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனம் லால் சலாம் திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் 'லால் சலாம்' படத்தின் அடுத்த எக்ஸைட்மென்ட் அறிவிப்பு இன்று மாலை 4;30 மணிக்கு வெளியாகும் என்று லைகா நிறுவனம் த அறிவித்தது.
 
இது என்ன அறிவிப்பு என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன்  இருந்தனர். இந்த நிலையில்,  லைகா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, லால் சலாம் படத்தை தமிழகத்தில்   உள்ள தியேட்டர்களில்  ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகிறது..