புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 நவம்பர் 2018 (17:15 IST)

பார்த்திடலாம் வா நீயா நானா..? - தனுஷுடன் போட்டியிட்ட சாய்பல்லவி

சாய்பல்லவி தற்போது தனுஷின் 'மாரி 2' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சாய்பல்லவி ஒரு தரலோக்கல் கேரக்டரில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியது.
 
 
இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் காஜலுக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்கின்றார். இப்போது படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சாய்பல்லவி  தனுஷே அசந்து போகும் அளவிற்கு படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் அவருக்கு ஈடாக குத்தாட்டம் போட்டு மாஸ் காட்டியுள்ளாராம்.
 
அந்த பாடல் தான் படத்தின் செம்ம ஹைலேட் என்று  கூறப்படுகின்றது. டிசம்பர் மாதம் வெளியாக உள்ள மாரி -2 படத்தின் சில புகைப்படங்களை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
 
அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.