கர்ணன் படத்தின் ரீமேக் உரிமையை தட்டி தூக்கிய தெலுங்கு நடிகர்!
தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கர்ணன் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமம் விற்கப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை படம் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். தனுஷ் படத்துக்கு இதுவரை இல்லாத முதல் நாள் வசூல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கடுத்த நாட்களிலும் வசூல் குறையாமல் உள்ளது.
இந்நிலையில் வரிசையாக தனுஷின் படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆகி வரும் நிலையில் இப்போது கர்ணன் படத்தின் ரீமேக் உரிமையை தெலுங்கு நடிகரான சாய் நிவாசன் கைப்பற்றி அதில் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.