புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 28 ஏப்ரல் 2021 (13:13 IST)

தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிக்கு கொரோனா: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிக்கு கொரோனா: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி சோட்டா ராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சோட்டா ராஜனுக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 
 
மும்பை தொடர் வெடிகுண்டு உள்பட பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு உடந்தையாக இருந்த தாவூத் இப்ராகிமின் கூட்டாளி சோட்டா ராஜனுக்கு கொரோனா என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது. மேலும் சோட்டா ராஜன் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிட தக்கது
 
சோட்டா ராஜன் உடல்நிலை குறித்த அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் சில நிமிடங்களில் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது