1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 ஏப்ரல் 2021 (16:06 IST)

உயிரிழந்த மூதாட்டி; உதவிக்கு வராத ஊர்க்காரர்கள்! – கண்ணீரில் முதியவர்!

உத்தர பிரதேசத்தில் இறந்த மனைவியின் உடலை அடக்க செய்ய யாரும் உதவி செய்யாததால் முதியவர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் கொரோனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசம் ஜாவுன்புர் பகுதியில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் கொரோனா அச்சத்தால் அவரை அடக்கம் செய்ய ஊர் மக்கள் யாரும் உதவி செய்யவில்லை.

இதனால் மூதாட்டியின் பிரேதத்தை சைக்கிளில் இடுகாட்டிற்கு சுமந்து சென்ற அவரது வயதான கணவர் சிறிது தூரத்திற்கு மேல் கொண்டு செல்ல முடியாமல் சாலையிலேயே அமர்ந்து கதறி அழுதுள்ளார். பின்னர் இந்த விவரம் காவல்துறைக்கு தெரிய வர அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் மனைவியை தகனம் செய்ய தேவையான உதவிகளை செய்துள்ளனர்.