திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 26 மே 2022 (15:04 IST)

எஸ் ஜே சூர்யாவுக்கு தடையா?... மீண்டும் ஒரு பஞ்சாயத்து… பரபரப்பு தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா.

1999 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அஜித்துக்கு திருப்புமுனையாக அமைந்த படம் வாலி. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா இப்போது தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர். மற்றும் தென்னிந்திய மொழிகளில் வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனராகவும் அறியப்படுகிறார். சமீபத்தில் மாநாடு படத்தில் அவர் நடித்திருந்த ‘தனுஷ்கோடி’ கதாபாத்திரத்துக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்க முயன்று அது கைவிடப்பட்டது. அப்போது அந்த படத்துக்காக அவர் வாங்கிய அட்வான்ஸ் தொகையை வட்டியோடு தரவேண்டும் என அந்த படத்தை தயாரிக்க இருந்த தயாரிப்பாளர் இப்போது கேட்டுள்ளாராம். ஆனால் அப்போதே அந்த முன்பணத்தை கொடுக்க தான் முன்வந்ததாகவும், ஆனால் தயாரிப்பாளர்தான் ‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என பணத்தைப் பெற மறுத்ததாகவும் எஸ் ஜே சூர்யா தரப்பில் சொல்லப்படுகிறதாம்.

இதனால் இந்த பஞ்சாயத்து சங்க நிர்வாகிகளிடம் சென்று எஸ் ஜே சூர்யாவுக்கு நடிக்க தடை விதிக்கலாமா என்ற ஆலோசனையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் எஸ் ஜே சூர்யா தன் முடிவில் உறுதியாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Source valaipehu