1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (14:09 IST)

ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது ‘தங்கலான்’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி உள்ளிட்ட பலர் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ‘தங்கலான்’திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விருந்தாக வெளியானது. 
 
இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சக்கை போடு போட்டதாக கூறப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் ‘தங்கலான்’திரைப்படம் இரண்டு வாரங்களில் 100 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து விக்ரம் ரசிகர்கள் ‘தங்கலான்’படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் ‘தங்கலான்’படத்தைப் பார்த்த இயக்குனர் சேரன் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: நேற்றுதான் தங்கலான் பார்க்க நேர்ந்தது. 
பா ரஞ்சித், விக்ரம் ஆகிய  இருவரின் அசுர உழைப்பும் அளவிடமுடியா திரை ஆற்றலும் காண முடிந்தது.. ரஞ்சித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர். கதை சொன்ன விதமும் காட்சிபடுத்திய விதமும்  அசரவைத்தது.. முதல்பாதி முழுவதும் ஆங்கிலப்படமாகவே இருந்தது.
 
Edited by Mahendran