ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 22 மே 2021 (15:24 IST)

ஆர் ஆர் அர் படத்தின் டிஜிட்டல் உரிமையே இத்தனைக் கோடியா? ஆச்சர்யத்தில் திரையுலகினர்!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர் ஆர் ஆர் படத்தின் டிஜிட்டல் உரிமை இதுவரை இல்லாத அளவுக்கு விலை போயுள்ளதாக சொல்லப்படுகிறது.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார்.

இந்த படத்தின் ரிலிஸ் தேதி அக்டோபர் 13 ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையால் பல்வேறு படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது ஆர் ஆர் ஆர் பட ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜி 5 நிறுவனம் அனைத்து மொழிகளிலும் சேர்ந்து 325 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொகை இதுவரை எந்தவொரு இந்திய சினிமாவுக்கும் கொடுக்கப்படாத விலை என்பது குறிப்பிடத்தக்கது.