செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 மே 2021 (11:15 IST)

மே 20 ல் ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர் வெளியீடு? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கி விரைவில் வெளியாகவுள்ள “ஆர்.ஆர்.ஆர்” படத்தின் புதிய போஸ்டர் மே 20ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் எண்டிஆர் நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதராம ராஜூ மற்றும் கோமரம் பீம் ஆகியோரது வாழ்க்கையை மையப்படுத்திய இந்த கதையை ஆக்‌ஷன் படமாக இயக்கியுள்ளார் ராஜமௌலி.

இந்த படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதம், இரண்டாம் அலை கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 2022ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மே 20ம் தேதி ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாள் வருகிறது. இதனால் அன்று பிரத்யேக ஆர்.ஆர்,.ஆர் போஸ்டர் அல்லது வேறு ஏதாவது அப்டேட்கள் வெளியாகலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.