செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (22:59 IST)

தல அஜித்தின் 'விசுவாசம்' படத்தில் இணைந்த 3வது காமெடி நடிகர்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு உள்பட பலர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சமிபத்தில் காமெடி மற்றும் குணசித்திர நடிகர் தம்பி ராமையாவும் உறுதி செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது இவர்களுடன் ரோபோ சங்கரும் இணைந்துள்ளார். அஜித்துடன் ரோபோசங்கர் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பிராமையா யோகி பாபு, ரோபோ சங்கர் கூட்டணி இணையும் பட்சத்தில் மூவரும் காமெடியில் கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே  யோகி பாபு, ரோபோ சங்கர் கூட்டணி வீரசிவாஜி, மன்னர் வகையறா போன்ற படங்களில் காமெடியில் பட்டையை கிளப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.