திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Modified: புதன், 5 ஜூலை 2017 (05:06 IST)

காதலில் விழுந்தாரா கமல் மகள்?

உலக நாயகன் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது பரபரப்பான செய்திகளில் சிக்கி வரும் நிலையில் தற்போது அவர் காதல் வலையில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது



 
 
லண்டனைச் சேர்ந்த இத்தாலி நாட்டு நடிகர் மைக்கேல் கார்சேல் என்பவர் மீது ஸ்ருதிஹாசன் காதல் வயப்பட்டுள்ளதாகவும், இருவரும் ஒன்றாக ஊர்சுற்றுவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளது. இந்த கிசுகிசுக்களை வழக்கம் போல் ஸ்ருதிஹாசன் ஒப்புக்கொள்ளவும் இல்லை,மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் லண்டன் பத்திரிகையாளர் ஒருவர் ஸ்ருதியின் காதல் குறித்து கேட்டபோது, 'இந்த மாதிரியான கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இது பற்றி ஒரு போதும் நான் கவலைப்படப்போவதில்லை. என்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி ஏன் உங்களிடம் நான் வெளிப்படையாக கூறவேண்டும் என்று ஆத்திரத்துடன் கூறி சென்றுவிட்டாராம்.