திங்கள், 25 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (19:50 IST)

ரஜினி ரசிகர்களைக் கண்டித்து அறிக்கை

அண்ணாத்த பட போஸ்டருக்கு ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்த சம்பவம்  விமர்சனங்கள் எழுந்த நிலையில் இதற்குக் கண்டனம் தெரிவித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது.

இந்நிலையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரஜினி ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து புகாரளித்துள்ள பால் முகவர்கள் சங்கம், பொதுவெளியில் ஆடு பலி கொடுத்த ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு இதுகுறித்த அறிவுறுத்தல்களை வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், இன்று அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற நிவாகி சுதாகர் ரசிகர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணாத்த பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி இரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது.

அருவருப்பான இதுபோன்ற செல்களில் யாரும் ஈடுபட வேண்டாஎன்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை வைரலாகி வருகிறது.