வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 11 செப்டம்பர் 2021 (16:49 IST)

போஸ்டரில் ஆட்டை வெட்டி ரத்தத்தை ஊற்றிய ரஜினி ரசிகர்கள்!

அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் வெளியிட்ட வீடியோ இணையத்தில் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று காலை வெளியான நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ரஜினியின் கம்பீரமான நடை, ரஜினிகாந்த் பேசும் மாஸ் வசனம் ஆகியவை இந்த மோஷன் போஸ்டரை வைரலாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோஷன் போஸ்டரில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது .

இந்நிலையில் இந்த மோஷன் போஸ்டரை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் ரஜினி போஸ்டரில் ஆடு ஒன்றை வெட்டி அதன் ரத்தத்தை ரஜினியின் முகத்தில் பீய்ச்சி அடிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.