1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (10:09 IST)

பயில்வான் ரங்கநாதனை ரோட்டில் மடக்கி திட்டி தீர்த்த நடிகை… வைரலான வீடியோ!

நடிகை ரேகா நாயர் சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

சினிமா நகைச்சுவை நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சினிமா நடிகர் நடிகைகளைப் பற்றிய கிசுகிசுக்களைப் பேசி அதன் மூலம் யுட்யுப் சேனல்களில் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறார். இவர் பேசும் கிசுகிசுக்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை சம்மந்தமான செய்திகளுக்காக இவருக்கு ஒரு பெரிய பாலோயர்ஸ் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை ரேகா நாயர் பற்றி மிக மோசமான கருத்துளை ரங்கநாதன் வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் ரேகா நாயர் அரை நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்திருந்ததை குறிப்பிட்டு ஆபாசமான விமர்சனங்களை வைத்தார்.

இந்நிலையில் இப்போது ரேகா நாயர் பீச்சில் நடைப்பயிற்சி செய்யும்போது ரங்கநாதனை பார்த்தபோது தனது கோபத்தை வெளிப்படுத்தி அவரை ஒரு கை பார்த்துள்ளார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.