வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (19:31 IST)

லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் அஜித்: வைரல் வீடியோ

ajith london
லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் அஜித்: வைரல் வீடியோ
லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் அஜித் பொருட்கள் வாங்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
கடந்த சில நாட்களாக நடிகர் அஜீத் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பது தெரிந்தது. மேலும் பைக்கிலேயே அவர் பல நாடுகளுக்கு சென்று வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன 
 
இந்த நிலையில் தற்போது அஜித் லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் செலுத்தும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நிலையில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு இன்னும் சில நாட்களில் அஜித் நாடு திரும்ப இருப்பதாகவும் அதன் பிறகு அஜித் 61 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது