உதயநிதியின் கைக்கு சென்றது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’
உதயநிதியின் கைக்கு சென்றது காத்துவாக்குல ரெண்டு காதல்
விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன
இந்த படம் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்த நிலையில் தமிழக ரிலீஸ் உரிமையை இந்த நிறுவனத்திடம் இருந்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது