செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (23:28 IST)

விஜய் சேதுபதி - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தின் ரிலீஸ் தேதியும் இப்படத்தை வெயிடும் நிறுவனத்தின் தகவலையும் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில்.#KaathuVaakulaRenduKaadhal இவர்களுடன் இணைந்து  இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இப்படம் விரைவில் ரிலீஸாகும் என தகவல் வெளியாகும் நிலையில்,  இப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என நடிகை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், நடிகர் விஜய்சேதுபதியுடன் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் டைட்டானிக் படத்தின் ரொமான்டிக் காட்சி போல் மூவரும் ரொமாண்டிக்காக இருக்கும் போஸ்டரையும் நயன்தாரா ரிலீஸ் செய்தார். இது வைரலான நிலையில் இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை விஜய்சேதுபதி இன்று அறிவித்துள்ளார்.

அதில்,  வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி இப்படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் எனவும், இப்படத்தை தமிழ் நாடு முழுவதும் உதய நிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் ரிலீஸ் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.