1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (14:03 IST)

தென்னிந்தியாவில் 5 மில்லியன் லைக் பெற்ற பாடல்! – ரவுடி பேபி புதிய சாதனை

மாரி 2 படத்தில் இடம்பெற்று ஹிட் அடித்த ரவுடி பேபி பாடல் தற்போது மீண்டும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடித்து 2018ம் ஆண்டில் வெளியான படம் மாரி 2. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில் இதில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் உலகம் முழுவதும் தொடர்ந்து பிரபலமாகி வருகிறது.

சமீபத்தில் இந்திய பாடல்களில் முதல்முறையாக 600 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய பாடல் உள்ளிட்ட பல சாதனைகளை ரவுடி பேபி படைத்தது. அந்த வகையில் தற்போது 5 மில்லியன் லைக்குகளை பெற்று தென்னிந்தியாவில் முதன்முறையாக அதிக லைக்குகள் பெற்ற பாடலாக ரவுடி பேபி புதிய சாதனை படைத்துள்ளது.