1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph

ஒரு நாளைக்கு எத்தனை தம் அடிப்பீங்க? ரசிகரின் கேள்வியால் திணறிய ராஷ்மிகா!

தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்துக்கொண்டிருக்கிறார். தமிழில் இவரது நடிப்பில் நேரடியாக வெளியான ஒரே தமிழ்ப்படம் சுல்தான். இருந்தாலும் அதற்கு முன்னரே அவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.
 
இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனாவிடம் ஒருவர், நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு கொஞ்சம் ஷாக்காகி பதில் அளித்த ராஷ்மிகா, நான் சிகரெட் பிடித்தது இல்லை. சிகரெட் பிடிப்பவர்கள் பக்கமே செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.