ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2024 (15:41 IST)

5 வருஷம் ஆனாலும் அந்த கதாபாத்திரத்தை இன்னும் யாரும் மறக்கல- ராஷ்மிகா நெகிழ்ச்சி!

இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

சமீபத்தில் அவர் பாலிவுட்டில் அனிமல் நடித்தார். அடுத்து தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தெலுங்கில் அடுத்து நடித்து வரும் கேர்ள் பிரண்ட் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். புஷ்பா மற்றும அனிமல் ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு அவரின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றுள்ளது. இப்போது பாலிவுட் முன்னணி நடிகைகளுக்கு இணையான சம்பளத்தை அவர் பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் விஜய் தேவரகொண்டாவோடு இணைந்து நடித்த டியர் காம்ரேட் திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் தற்போது அந்த படம் குறித்த நெகிழ்ச்சியினை ராஷ்மிகா பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் “டியர் காம்ரேட் வெளியாகி 5 ஆண்டுகள் ஆனபிறகும் இப்போது என்னை பலர் லில்லி என்றே அழைக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்