சிவகார்த்திகேயன் 23 படத்தின் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!
ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு சிங்கநடை எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்துக்கு இடையிலேயே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கை முடித்துள்ள முருகதாஸ் இப்போது மீண்டும் சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார்.
இப்போது தூத்துக்குடியில் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.