ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 27 ஜூலை 2024 (09:41 IST)

தங்கலான் ஷூட்டிங்குக்குப் பிறகு ஐந்து மருத்துவர்களை சந்தித்தேன் – மாளவிகா மோகனன் பகிர்ந்த தகவல்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் உள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் ஆகியவை அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடுபவையாக அமைந்துள்ளன. படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த படத்தில் மாளவிகா மோகனன் ஆராத்தி என்ற பெண்ணாக நடித்துள்ளார். அவரின் வேடம் கதையில் முக்கியப் பங்காற்றும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவரது கதாபாத்திரத்துக்காக டாட்டூ அணிதல், மேக்கப் போடுதல் என ஒவ்வொரு நாளும் ஷூட்டிங்கில் 4 மணி நேரம் ஆகுமாம். கண்களில் லென்ஸ் பொருத்திக் கொண்டு நடித்தாராம். இதனால் அவருக்கு ஷூட்டிங்குக்குப் பிறகு தோல் அலர்ஜி, கண் பிரச்சனை ஆகியவை 5 மருத்துவர்களை சந்தித்து சிகிச்சைப் பெற்றாராம். இதை அவரே ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.