புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (17:11 IST)

சோபன்பாபு வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ‘பாகுபலி’ நடிகர்!

சோபன்பாபு வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ‘பாகுபலி’ நடிகர்!
பழம்பெரும் தெலுங்கு நடிகர் சோபன் பாபு வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க தற்போது தெலுங்கு திரை உலகின் முன்னணி நிறுவனம் ஒன்று முயற்சித்து வருகிறது
 
கடந்த 1957ஆம் ஆண்டு பிறந்த சோபன்பாபு 1959 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். நம்மூர் சிவாஜி கணேசன் போல் தெலுங்கு திரை உலகில் மிகப் பெரிய ஸ்டாராக இருந்த சோபன்பாபுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரிக்க அவரது வாரிசுகள் தற்போது முயற்சித்து வருகின்றனர் 
 
சோபன்பாபு கேரக்டரில் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா டகுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது 
 
தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாக உள்ள இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன