வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (18:58 IST)

ராம்சரணுக்கு காயம்… ஷங்கரின் கேம்சேஞ்சர் ஷூட்டிங் ரத்து!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராம்சரண். சமீபத்தில் இவர் நடித்து வெளியான RRR திரைப்படம் உலக அளவில் பிரபலமான நிலையில், ராம்சரணின் அடுத்த படமான கேம்சேஞ்சர் படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாக விட்டு விட்டு நடந்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கிலும் பிஸியாக இருப்பதே இந்த படத்தின் தாமதத்துக்குக் காரணம். இந்த படத்தின் 5 பாடல்களுக்காக மட்டும் சுமார் 90 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தொடங்குவதாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுளது. ராம்சரணுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரை மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதால் ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.