புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2020 (07:34 IST)

மீண்டும் படப்பிடிப்பை தொடங்க நினைத்த ராஜமௌலி – ஆனால் ஹீரோக்களால் சிக்கல்!

ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்பை நடத்த ராஜமௌலி திட்டமிட்டிருந்த நிலையில் அந்த படத்தின் கதாநாயகர்களான ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் அதற்கு மறுத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் மார்ச் 19 ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதையடுத்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக சினிமாவில் இருக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து சினிமா படப்பிடிப்புக்கான அனுமதி எப்போது வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அண்டை மாநிலங்களான தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களின் முதல்வர்களும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளனர். முன்னதாக இது சம்மந்தமாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அம்மாநில முதல்வர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து தெலங்கானாவில் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் நடந்த நிலையில் அதில் பணியாற்றிய சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்பை நடத்தலாம் எனத் திட்டமிட்டு இருந்த ராஜமௌலிக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது. அந்த படத்தின் கதாநாயகர்கள் இருவரும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாது என சொல்லிவிட்டதால் படப்பிடிப்பை மொத்தமாக நிறுத்தியுள்ளார் ராஜமௌலி.