செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2020 (07:24 IST)

எல்லா நாளும் தீபாவளி… மோடி ஆட்சியில் எல்லா நாளும் தீபாவளி – கடுப்பேத்தும் தினா!

கொரோனா மற்றும் சீனாவுக்கு எதிரான போர் ஆகியவற்றால் பீதியில் மக்கள் இருக்கும் நிலையில் இசையமைப்பாளர் தினா பாரதிய ஜனதா கட்சி பற்றி புகழ்ந்து பாடல் ஒன்றை பாடியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர்களில் ஒருவரும், இசைக்கலைஞர்கள் சங்கத் தலைவருமான தினா தனது சமூகவலைதளப்பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ‘எல்லா நாளும் தீபாவளி… மோடி ஆட்சியில் எல்லா நாளும் தீபாவளி’ எனத் தொடங்கும் ஒரு பாடல் மோடி மற்றும் பாஜகவின் புகழ்பாடுகிறது.

அந்த பாடலுக்குப் பின் வீடியோவில் தோன்றும் தினா ‘வாழ்க பாரதம்.. வாழ்க பாரதிய ஜனதா கட்சி… சில ஆண்டுகளுக்கு முன் தியேட்டர்களில் தேசிய கீதம் பாடவேண்டும் என சொன்னபோது சிலர் அதை ஏற்காமல் புறக்கணித்தனர். ஆனால் அவர்களே சி ஏ ஏ வந்தபோது கொடி பிடித்து தேசிய கீதத்தைப் பாடினர். அதே போல இப்போது ஒரு கருத்து பரவி வருகிறது.

நம் நாட்டை விட, சீன ராணுவம் பலம் வாய்ந்தது’ என, ஒரு புரளி வந்து கொண்டிருக்கிறது. யாரும் கவலைப்படாதீர்கள். நமக்கு மோடி இருக்கிறார். இந்த போர், அதாவது, இந்த போர் வந்து அவர்களுக்கு புதுசா இருக்கலாம். ஆனால், கிட்டத்தட்ட 15 வருடமாக நாம் ஒவ்வொரு நாளும், பாகிஸ்தானுடன் போர் செய்கிறோம். நம் ராணுவத்தை மோடி பலமாக்கியுள்ளார். தவறான தகவலை பரப்பாமல் இருப்போம். தேசிய கீதத்தைப் பாடுவோம். பாரத பிரதமர் மோடி வழி நடப்போம்.’ எனக் கூறியுள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தாதது , இந்திய எல்லையில் சீன ராணுவத்தை ஊடுருவ விட்டது என பாஜக மேல் மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் தினாவின் இந்த பேச்சு கடுப்பேற்றும் விதமாக இருப்பதாக இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.