திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 மார்ச் 2018 (16:33 IST)

பணத்திற்காகதான் நடித்தேன்: ரகுல் பளிச்...

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். தற்போது தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் ரசிகர்களாலும் விரும்பப்ப்டுகிறார்.
 
தற்போது ஹிந்தி படங்கலில் நடித்து வரும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் ஆன்மிக வழியில் செல்ல ஆரம்பித்து உள்ளேன். சிறு வயதில் ஆன்மிக புத்தகங்களை விரும்பி படிப்பேன். 
 
எல்லோரும் வாழ்க்கையை திட்டமிட்டு நகர்த்துகிறார்கள். நான் எந்த திட்டமும் வைத்துக்கொள்வது இல்லை. ஆன்மிக சிந்தனை இருப்பதால் நல்ல விஷயங்கள் தானாகவே நடக்கிறது. 
 
நடிகையாக வேண்டும் என்று திட்டமிடவில்லை. கைச்செலவுக்காகத்தான் நடிக்க வந்தேன். கேமரா முன்னால் நிற்பது பிடித்ததால் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.