திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2024 (07:46 IST)

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களை இயக்க இயக்குனர்கள் இல்லை… ரஜினி பேச்சு!

ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர. அனிருத் இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர். இந்த விழாவில் ரஜினியின் வழக்கம்போல அவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாக அமைந்தது.

அவர் பேசும்போது “தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களை இயக்க, அதிக இயக்குனர்கள் இல்லை. ஒரு வெற்றி படத்துக்குப் பிறகு இன்னொரு வெற்றி படம் கொடுப்பதை விட, ஒரு தோல்வி படத்துக்குப் பிறகு இன்னொரு வெற்றி படம் கொடுப்பதுதான் பெரிய விஷயம்” எனப் பேசியுள்ளார். மேலும் வேட்டையன் திரைப்படம் கமர்ஷியலாகதான் இருக்கும் எனவும் அவர் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.