1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 ஜூலை 2020 (11:31 IST)

ரஜினிகாந்த் கட்சி குறித்து கராத்தே தியாகராஜன் கூறிய பரபரப்பு தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் விரைவில் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி கூறினார். அதன் பிறகு அவர் எப்போது காட்சி ஆரம்பிப்பார் என்பது குறித்த கேள்வி அவரது ரசிகர்களிடையே இருந்து வந்தது 
 
இருப்பினும் ’ரஜினி மக்கள் மன்றம்’ என்ற அமைப்பை ஆரம்பித்த ரஜினிகாந்த், அதன் நிர்வாகிகளை தமிழகம் முழுவதும் நியமனம் செய்து வந்தார். ரஜினி மக்கள் மன்றம் விரைவில் அரசியல் கட்சியாக உருமாறும் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் ’ரஜினிகாந்த் நவம்பர் மாதத்திற்குள் கட்சி ஆரம்பித்தார் என கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார். மேலும், ‘ஸ்டாலின் கூறிய ஒன்றிணைவோம் வா என்பது மக்களைச் சென்றடையவில்லை என்றும் ஆனால் ரஜினி கூறிய ’சும்மா விடக்கூடாது’ என்ற கருத்து உலக அளவில் வைரல் ஆனது என்றும் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார். கராத்தே தியாகராஜன் கூறியபடி ரஜினிகாந்த் நவம்பர் மாதம் கட்சியை ஆரம்பிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்