ரஜினியின் ’’அண்ணாத்த’’ படம் வசூல் சாதனை
தீபாவளி பண்டிகை நாளில் ரஜினி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் ஒரே நாளில் 35 கோடி வசூல் செய்ததாகவும் இன்றும் பல நகரங்களில் உள்ள திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு ரஜினியின் 2.0 படம் ஒரே நாளில் 33 கோடியும், விஜய்யின் சர்க்கார் 31 கோடியும் வசூல் செய்வததாக கூறப்படுகிறது.