செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (13:01 IST)

சுடசுட சுடப்பட்ட அண்ணாத்த..! இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி!

அண்ணாத்த திரையரங்குகளில் வெளியான அன்றே திருட்டுத்தனமாக இணையத்திலும் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. நீண்ட நாள் கழித்து தீபாவளிக்கு ரஜினி படம் வெளியாவதால் மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த வகையில் நேற்று வெளியான அண்ணாத்த படம் ஒரே நாளில் வசூலில் டாக்டர், மாஸ்டர் படங்களின் வசூலை முறியடித்துள்ளது. அதேசமயம் படம் சுமார் என்ற எதிர் விமர்சனங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் படம் வெளியான நேற்றே திருட்டுதனமாக அதன் தியேட்டர் காப்பி இணையதளங்களிலும், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளிலும் வெளியாகியுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.