செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 5 நவம்பர் 2021 (16:18 IST)

ஒரே நாளில் ரூ.1.50 கோடி: சென்னையிலும் ‘அண்ணாத்த’ சாதனை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு முன்னணி விமர்சகர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி நேற்றைய முதல் நாளில் இந்த படம் சுமார் 35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சர்க்கார் திரைப்படம் 32 கோடி முதல் நாள் வசூல் செய்ததே சாதனையாக இருந்த நிலையில் அந்த சாதனையை ‘அண்ணாத்த’ முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் ‘அண்ணாத்த’ ஒன்றரை கோடி வசூல் செய்து புதிய சாதனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்த நெகட்டிவ் விமர்சனமும் ‘அண்ணாத்த’ படத்தின் வசூலை சிறிதளவுகூட பாதிக்கவில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது