ஜெயிலர் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த்… லீக்கான புகைப்படம்!
ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் தொடங்கி நடந்து வருகிறது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு டைட்டில் ”ஜெயிலர்” என்று வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் இடம்பெறவில்லை. சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஷூட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் லீக்காகியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.