1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (15:32 IST)

ரஜினி படத்தில் தமன்னாவா?... ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு டைட்டில் ”ஜெயிலர்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியான  போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது. போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் இடம்பெறவில்லை. சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மற்றொரு கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.