கோயில் கோயிலாக ஏறி இறங்கும் ரஜினி மகள்... பூஜை, பரிகாரம்னு ஒரே பிஸி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.
செளந்தர்யா திருமணம் செய்துகொள்ள இருப்பவரின் பெயர் விசாகன். இவர் தொழிலதிபரின் மகன். மிகப்பெரிய கோடீஸ்வரரான விசாகன், ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரண்டவாது திருமண வாழ்க்கையாவது நிலைக்க அமைய வேண்டும் என்று செளந்தர்யா பல்வேறு கோவில்களுக்கு சென்று பிரார்த்தனைகளையும், பூஜைகளையும், பரிகாரங்களையும் செய்து வருகிறாராம்.
அந்த வகையில் சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். அதோடு, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலிலும் சுவாமி தரிசனம் செய்து பரிகார பூஜைகளை மேற்கொண்டார்.