திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜனவரி 2019 (18:58 IST)

ரஜினியை அடுத்து பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் சிம்ரன்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற நடிகை சிம்ரனின் கனவு சமீபத்தில் வெளியான 'பேட்ட' படத்தில் நிறைவேறியது. இந்த படத்தில் ரஜினி இளமையாக தோன்றுவது போலவே சிம்ரனும் இளமையாக தோன்றியதாக ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்தது

இதனையடுத்து சிம்ரன் தற்போது வேறு சில படங்களிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் மாதவன் நடிக்கும் விஞ்ஞானி நம்பி நாராயணன் உண்மைக்கதை படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க சிம்ரன் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. 'ராக்கெட்டரி' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

'கன்னத்தில் முத்தமிட்டால்', 'பார்த்தாலே பரவசம்' ஆகிய படங்களில் ஏற்கனவே மாதவனுடன் சிம்ரன் நடித்திருந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மாதவனுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது